Sunday, January 27, 2019

தயவு செய்து கழுதைகளை தூற்றாதீர்கள்






உலகம் முழுதும் அதிகமாக தூற்றப்படும் ஒரு மிருகம் உண்டென்றால் அது கழுதை தான் என்று நினைக்கிறேன். கழுதைகளை பற்றிய பொதுவான கருத்து, 'இருப்பதிலயே அறிவுக்கூர்மையற்ற ஒரு முட்டாள் விலங்குஎன்பது தான்இது தவறான கருத்து. ஆய்வுகள் சொல்கிறது அதே வயதுள்ள குதிரையை காட்டிலும் கழுதைகள் மிகவும் புத்திசாலி மற்றும் வலிமைமிக்கவை. கழுதைகளுக்கு வியத்தகு நினைவாற்றல் உண்டு. 25 ஆண்டுகளுக்கு முன் பார்த்த இடங்கள் மற்றும் அவற்றுடன் இருந்த மற்ற கழுதைகளைகழுதைகளால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். குதிரைகளை போல கழுதைகள் எளிதில் மிரள்வதில்லை. கழுதைகளின் அடம் பிடிக்கும் குணம் மிகவும் பிரசித்தம். இந்த குணம் மன்னரிடம் இருந்தால் அவரின் உறுதிப்பாடு பாராட்டப்படும்ஆனால் கழுதையிடம் இருந்தால் அது அடம் பிடித்தல் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழியே உண்டு. (That which is called firmness in a king is called obstinacy in a donkey). நம் ஊரிலும் கழுதை பமொழிகளுக்கு பஞ்சமில்லை.. 'கழுதை கெட்டால் குட்டிச்சுவறு' ' கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைஎன்றெல்லாம் சொல்வதுண்டு. உண்மையில் அந்த பழமொழி என்னவென்றால் 'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனைஎன்பது தான். கழு என்பது ஒரு வகை கோரப் புல். கோர புல்லில் தைத்த பாயின் கற்பூர வாசத்தால் பாம்பு வராது என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி அது. கழுதை மேல் நமக்கிருந்த இளக்காரத்தால் மொழி மாறி விட்டது. வயதை பற்றி குறிப்பிடும் பொழுது, 'ஏழு கழுதை' வயதாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. ஆங்கிலத்தில் கூட வயதை குறித்து பேசும் பொழுது கிண்டலாக Donkey's years என்று சொல்வதுண்டு. யாரையாவது திட்ட வேண்டுமென்றால் 'கழுதை' என்ற சொல் மிக சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. இதை விட பெருத்த அநியாயம், ஊழல்வாதி அதிகரிகளையும், அரசியல்வாதிகளையும் எதிர்த்து நடக்கும் ஊர்வலங்களில் கழுதைக்கு மாலையிட்டு கழுத்தில் முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகைகள் அணிய செய்து ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். குற்றவாளிகளையும் பாலியில் குற்றங்கள் செய்தவர்களையும்  கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் அமரச் செய்து நகர் வலம் செல்வார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு தகவல், இந்தியாவில் மட்டும் சுமார் 160 லட்சம் கழுதைகள் தினமும் பொதி சுமந்து கடுமையாக உழைக்கிறது. சங்க காலத்தில் கழுதையில் ஏர் பூட்டி உழுததாக சொல்லப்படுகிறது. இயேசு கிறிஸ்து கழுதை மேல் அமர்ந்து தேவாலயம் சென்றார். கிராம தேவதையான சீதளா தேவிக்கு வாகனம் கழுதை தான். தமிழகத்தில் பல இடங்களில் சீதளா தேவி கோவில்கள் உண்டு. இனிமேலாவது தயவு செய்து கழுதைகளை தூற்றாதீர்கள்